ஆண்டாங்கோவில் தடுப்பணையை சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர்

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆண்டாங்கோவில் தடுப்பணையை தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.

Update: 2022-11-13 18:19 GMT

வெள்ளப்பெருக்கு

அமராவதி ஆற்றுப்பகுதியில் பெய்து வரும் தொடர் மலை காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 87.87 அடி தண்ணீர் உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 3306 கனஅடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 4050 கனஅடி தண்ணீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

27056 கன அடி தண்ணீர்

இந்நிலையில் வெளியேற்றப்பட்ட தண்ணீர் அரவக்குறிச்சி, சின்னத்தாராபுரம் ராஜபுரம், க.பரமத்தி, செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிளைவாய்க்கால் வாயிலாக ஆண்டாங்கோவில் அருகே உள்ள தடுப்பணைக்கு நேற்று மாலை நிலவரப்படி 27056 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆண்டாங்கோவில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் சீறி பாய்ந்து இருகரைகளையும் தொட்டுக்கொண்டு சென்றதை காண முடிந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் பலர் ஆண்டாங்கோவில் தடுப்பணையை நேரில் வந்து கண்டு களித்து சென்றதை காண முடிந்தது.

அரவக்குறிச்சி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, தாராபுரம் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் தற்போது கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள கொத்தப்பாளையம் தடுப்பணை தாண்டி சீறிப்பாய்ந்து செல்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்