சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கினால் கடும் நடவடிக்கை - வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை

சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-06-17 18:45 GMT

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர் சங்க நிர்வாகிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலக களப்பணியாளர்கள் மூலம் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், அவ்வாறு வாகனங்களை வாடகை பயன்பாட்டுக்கு வர்த்தக நோக்கில் இயக்கப்பட்டால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஓட்டுனர் உரிமம் தகுதி இழப்பு போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் நாமக்கல் மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் தகுதிச் சான்று, காப்புச் சான்று, அனுமதி சீட்டு, பசுமை வரி, புகைச்சான்று மற்றும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் உள்ளதா என சரி பார்த்து மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்டுனர்கள் இருக்கப்பட்டை மற்றும் சீருடை அணிந்து பாதுகாப்பான முறையில் வாகனங்களை இயக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்