பால் கொள்முதலுக்கு தடை ஏற்படுத்தினால் நடவடிக்கை

பால் கொள்முதலுக்கு தடை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் பொதுமேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-03-10 19:00 GMT

மதுரை ஆவின் பொது மேலாளர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை ஆவினில் தற்போது 18 ஆயிரம் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 36 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதர ஒன்றியங்களின் மூலம் பால் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் மொத்தம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 86 ஆயிரத்து 200 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பால் கொள்முதல் விலை விட்டர் ஒன்றுக்கு ரூ.7 ஊக்கத்தொகையாக வழங்ககோரி பால் நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளார்கள். தற்போது பால் விலை உயர்வு குறித்து அரசின் பரிசீலினைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்ட அறிவிப்பினை பொருட்படுத்தாமல், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள், ஒன்றியத்தை சார்ந்த பால் கூட்டுறவு சங்கத்தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்களை நடத்தும் சங்க நிர்வாகிகள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் பெறப்படும் மொத்த பாலினை தவறாமல் கொள்முதல் செய்து மதுரை ஆவினுக்கு வழங்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்கள் பாதிக்காத வண்ணம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் 1983-ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்