அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 50 பேருக்கு வாந்தி-மயக்கம்

நாகையில், இரவு உணவு சாப்பிட்ட அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 50 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதில் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2022-10-11 18:45 GMT

நாகையில், இரவு உணவு சாப்பிட்ட அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 50 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதில் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இரவு உணவு சாப்பிட்டனர்

நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 287 மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு நேற்று இரவு வழக்கம்போல தோசையுடன் சாம்பார் உணவாக வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட 50 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில்20 பேர் அனுமதி

இதில் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து மாணவிகள் கூறும்போது, இன்று(அதாவது நேற்று) இரவு தோசையும், சாம்பாரும் வழங்கப்பட்டது. இதில் சாம்பாரில் பூரான் இருந்தது. இதை எடுத்து சாப்பிட்ட ஒவ்வொரு மாணவிகளுக்கும் அடுத்தடுத்து மயக்கம் ஏற்பட்டது. கவனமாக வழங்கப்படாததால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்