9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்

ஆமணக்கு விதை சாப்பிட்ட 9 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் அடைந்தனர்.

Update: 2022-07-04 16:59 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.பூசாரிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிய 9 மாணவர்கள், அப்பகுதியிலிருந்த ஆமணக்கு செடிகளில் இருந்த விதைகளை தின்றுள்ளனர். பின்னர் அவா்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

இரவு, 7.30 மணியளவில் ஒவ்வொரு மாணவராக வாந்தி, மயக்கமடைந்தனா். அவர்களை பெற்றோர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்