பூபதியூர் நடைபாதை பிரச்சினையில் நில உரிமையாளரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

பூபதியூர் நடைபாதை பிரச்சினையில் நில உரிமையாளரை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-05 12:09 GMT

கோத்தகிரி

கோத்தகிரி பூபதியூர் நடைபாதை பிரச்சினையில், மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின்படி நில உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்ய வலியுறுத்தி கோத்தகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோத்தகிரி மார்கெட் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டப் பொருளாளர் மண்ணரசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பத்மநாதன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பெரியசாமி, மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞரணி மாநில செயலாளர் பார்வேந்தன் கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கோத்தகிரி அருகே உள்ள ஓரசோலை, பூபதியூர் கிராமத்தில் நடைபாதை பிரச்சினை சம்பந்தமாக தனியார் நிலத்தின் உரிமையாளர் மீது தாழ்த்தப்பட்டோர் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும், அவர் வகித்து வரும் அரசுப் பதவிகளில் இருந்து அவரை நீக்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்