ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று சென்ற வைகை எக்ஸ்பிரஸ்

ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று சென்றது.

Update: 2023-09-16 19:48 GMT

சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் காலை - மாலை ஸ்ரீரங்கத்தில் நின்று செல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து 16-ந்தேதி (நேற்று) முதல் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீரங்கம் வந்த வைகை எக்ஸ்பிரஸ் 3-வது நடைமேடையில் நின்று சென்றது. அந்த ரெயிலுக்கு ஸ்ரீரங்கம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் என்ஜின் டிரைவர்கள், ரெயில்நிலைய மேலாளர், ரெயில்வே ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்