வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

Update: 2023-05-30 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

வடமாடு மஞ்சுவிரட்டு

காரைக்குடி அருகே தளக்காவூரில் ஓய்.எம்.சி.ஏ. கத்தோலிக்க இளைஞர் மன்றத்தின் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. போட்டியை தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, காரைக்குடி தாசில்தார் தங்கமணி, திருப்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, துணை தாசில்தார் சிவராமன், முபாரக், சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் அருள்ராஜ், வருவாய் ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டியில் தளக்காவூர், மானகிரி, தேனி, மதுரை, மேலூர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து 15 காளைகளும், இந்த காளைகளை அடக்க 15 குழுக்களை சேர்ந்த 165 மாடு பிடி வீரர்களும் கலந்துகொண்டனர்.

பரிசுகள்

இந்த போட்டியில் தளக்காவூர் கிராமத்தை சேர்ந்த நிர்மல் என்பவரது காளையும், மதுரை மாவட்டம் மலப்பட்டி காஞ்சிவனம் கோவில் காளை ஆகியவை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடு பிடிவீரர்களுக்கும் ரொக்க பணம், கேடயம், குத்துவிளக்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. போட்டியில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு பார்வையிட்டு ரசித்தனர்.

இதேபோல் சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் 12 காளைகள் பங்கேற்றன. 100-க்கும் அதிகமான மாடு பிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் மாடு பிடி வீரர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் வெற்றி பெற்று பரிசுகளை வென்றது. விழாவையொட்டி ஏராளமான மக்கள் போட்டியை கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்