இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

Update: 2023-04-28 18:45 GMT

விருத்தாசலம்

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பெரியார்நகர் தெற்கு எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சலவை தொழில் செய்யும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டும் போது கழிவறை மற்றும் சலவை தொழில் கூடத்தில் உள்ள நீர் தேக்க தொட்டிக்கு செல்லும் குழாய் சேதமடைந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த 10 நாட்களாக கழிவறை மற்றும் சலவை தொழில் கூடத்துக்கு தண்ணீர் செல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேதம் அடைந்த குழாயை உடனடியாக சரி செய்து தர வேண்டும், விருத்தாச்சலம் மணிமுத்தாற்றில் கழிவு நீரை திறந்து விடுவது, குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்ட தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு அய்யப்பன் தலைமையில் செயலாளர் கோகுலகிறிஸ்டீபன், ராமச்சந்திரன், பிரகாஷ், சுரேஷ், சுதாகர், ஜெயபால், ஜனா உள்பட பலர் விருத்தாச்சலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போட்டத்தை கைவிட்ட அவர்கள் நகராட்சி அலுவலர்களை சந்தித்து மனு கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்