கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல்...மக்கள் அதிர்ச்சி

கொடைக்கானலில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2024-09-21 10:55 GMT

திண்டுக்கல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்த மரங்களையும், பசுமை போர்வை போர்த்திய மலைப்பகுதிகளையும் கொண்டது. இதனை பார்வையிட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.

இந்நிலையில், கொடைக்கானல் அருகே தொலுக்கம்பட்டி பகுதியில் 200 அடி நீளத்திற்கு நிலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த விரிசலானது மேல்மலை கிளாவரை தொலுக்கம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேல்மலையில் உள்ள கீழ் கிளாவரை கிராமத்திற்கு செருப்பன் ஓடையில் இருந்து குழாய் மூலம் அப்பகுதிக்கு நீர் வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக நீர் வராததால், கிராம மக்கள் சிலர் வனப்பகுதிக்குள் சென்று பார்த்தபோது நிலம் பிளவுற்று இருந்தது தெரிய வந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்