தூத்துக்குடி மாவட்டத்தில் சூரிய சக்தி மின்மோட்டார் பம்பு செட்டு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் சூரிய சக்தி மின்மோட்டார் பம்பு செட்டு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-16 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் சூரிய சக்தி மின்மோட்டார் பம்பு செட்டு அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சூரிய சக்தி மோட்டார்

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முன்னோடி திட்டமான சூரிய சக்தி மூலம் இயங்க கூடிய 7.5 எச்.பி. உள்ள மோட்டார் பம்பு செட்டுகளுக்கு மற்றும் விவசாய மின் இணைப்பு வேண்டி தட்கல் திட்டம், சுயநிதி திட்டம் ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் சாதாரண முறையிலான திட்டம் ஆகிய திட்டங்களில் பதிவு செய்து உள்ளனர். இவ்வாறு பதிவு செய்தவர்கள் சூரிய சக்தி மூலம் இயங்க கூடிய 7.5 எச்.பி திறன் கொண்ட மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

இந்த திட்டத்தின் மூலம் சூரிய சக்தி மின்பலகை அமைப்பதற்கான செலவில் 30 சதவீதம் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மானியமாகவும், மீதம் உள்ள 40 சதவீதத்தை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் உத்தரவாதத்தின் பேரில் அரசு வங்கிகளின் நிதி உதவியுடன் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

பதிவு செய்யலாம்

சூரிய சக்தி மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.2.28 வீதம் நிதயுதவி வழங்கி வங்கி கணக்கில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செலுத்திவிடும். மேலும் சூரிய சக்தி மூலம் மின்உற்பத்தி செய்து மின்தொகுப்பில் ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும், விவசாயிக்கு 50 பைசா வீதம் ஊக்கத்தொகையாக வழங்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் செயல்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தி பெருகுவதோடு மின்பாதையில் ஏற்படும் மின் இழப்பும் பெருமளவு குறையும். மேலும் தரமான மின்சாரம் கிடைக்க வழிவகை ஏற்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதி உடைய தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகள், தங்கள் பகுதிக்கு உரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகி தங்கள் விருப்ப கடிதத்தை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்