இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

Update: 2022-09-17 18:45 GMT

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு துணை செயலாளர் காசி.பாஸ்கரன், மாவட்ட தலைவர் லண்டன் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கமல்ராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் 21 தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அய்யப்பன், நகர மேற்கு செயலாளர் குமரேசன், ஒன்றிய செயலாளர் நீடூர் மதிவாணன், நகரசபை உறுப்பினர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி, ெரயிலடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு பா.ம.க., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பா.ம.க. சார்பில் நடைபெற்றது. மாவட்ட வன்னியர் சங்க தலைவர் பாக்கம் சக்திவேல் முன்னிலை வகித்தார். பாட்டாளி மக்கள் கட்சி நகர கழக செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். நிகழ்ச்சியில் உயிரிழந்த மொழிப்போர் தியாகிகள் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்