வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

Update: 2022-06-15 19:34 GMT

இந்திய- சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த போரில் இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தஞ்சை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல சங்கம் சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நேற்று நடத்தப்பட்டது. தஞ்சை திலகர் திடலில் இருந்து இந்த ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்திற்கு அகில இந்திய முன்னாள் படைவீரர் சங்க துணைத்தலைவர் கர்னல் அரசு தலைமை தாங்கினார். தமிழ்நாடு முன்னாள் படைவீரர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

ஊர்வலம் திலகர் திடலில் இருந்து தொடங்கி சோழன்சிலை, ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி, அண்ணாசிலை வழியாக ரெயிலடியை வந்தடைந்தது. அங்கு வைக்கப்பட்டு இருந்த வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் படைவீரர்கள் சங்க மகளிரணி தலைவர் நளினி மற்றும் முன்னாள் படைவீரர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்