சங்க கால நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை

சங்க கால நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.;

Update: 2023-04-29 19:23 GMT

கரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நேற்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் மற்றும் தமிழ் கவிஞர்கள் நாளை முன்னிட்டு கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சங்க கால புலவர்களான கருவூர் புலவர்கள் பன்னிருவர் நினைவு தூணுக்கு கலெக்டர் பிரபுசங்கர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் திருக்குறள் பேரவையின் சார்பில் தமிழ் அறிஞர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசனின் வெண்பா புனைதல் போட்டி நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு எழுதுகோல்களை பரிசாக கலெக்டர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து சங்க கால புலவர்கள் குறித்த சொற்பொழிவு தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்