குப்பை தொட்டியா? சாக்கடை கால்வாயா?

சாக்கடை கால்வாயில் குப்பைகளை கொட்டப்படுகின்றன.

Update: 2022-08-03 17:35 GMT

சிவகங்கை பஸ் நிலையம் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை கொட்டி அதை குப்பை தொட்டியாக மாற்றி விட்டனர். இது சாக்கடை கால்வாயா அல்லது குப்பை தொட்டியா என்று தெரியாத அளவுக்கு காட்சியளிக்கிறது. மேலும் குப்பைகளால் கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags:    

மேலும் செய்திகள்