கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

சிவகாசி தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2023-06-28 20:00 GMT

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வு கூட்டம்

சிவகாசி தாலுகாவில் பணியாற்றி வந்த 12 கிராம நிர்வாக அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் ஆர்.டி.ஓ. விஸ்வநாதன், சிவகாசி தாசில்தார் (பொறுப்பு) சாந்தி, ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் தாசில்தார் ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் விவரம் வருமாறு:-

மங்கலத்தில் பணியாற்றி வந்த கண்ணன் சிவகாசிக்கும், தாயில்பட்டியில் பணியாற்றி வந்த காமராஜ் ஆனையூருக்கும், வேண்டுராயபுரத்தில் பணியாற்றி வந்த செல்லச்சாமி திருத்தங்கலுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தாயில்பட்டி

வடபட்டியில் பணியாற்றி வந்த சங்கிலிபிரபு கீழத்திருத்தங்கலுக்கும், நமஸ்கரிதான்பட்டியில் பணியாற்றி வந்த சித்ரா வெற்றிலையூரணிக்கும், சிவகாசி சுப்பிரணியன் நமஸ்கரிதான்பட்டிக்கும், செவலூர் பாலமுருகன் புதுக்கோட்டைக்கும், கவுண்டம்பட்டி ரீனா, வாடி கிராமத்துக்கும், ஈஞ்சார் விஜய பாண்டி கவுண்டம்பட்டிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலாமத்தூர் குருபாக்கியம் செவலூருக்கும், வாடி கிராமத்தில் பணியாற்றி வந்த மல்லிகா மேலாமத்தூருக்கும், புதுக்கோட்டை விஜயபிரபா ஈஞ்சார் கிராமத்துக்கு கூடுதல் பொறுப்பாகவும், ஆனையூர் அரிச்சந்திரன் மங்கலத்துக்கும், வெற்றிலையூரணி கணேசன் தாயில்பட்டிக்கும், திருத்தங்கல் பாண்டி, வேண்டுராயபுரத்துக்கும், ஈஞ்சாரில் பணியாற்றி வந்த வெங்கடசாமி வடபட்டி கிராமத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிராம கணக்கு

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது கிராம கணக்குகளையும், அரசு வழங்கிய லேப்டாப் உள்ளிட்ட தளவாட பொருட்களை பட்டியலிட்டு முறையாக ஒப்படைத்துவிட்டு உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஆர்.டி.ஓ. விஸ்வநாதன் வலியுறுத்தி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்