5 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணிபுரிந்து வரும் மாணிக்கம் வடபொன்பரப்பிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமன் கீழ்குப்பத்துக்கும், உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி சங்கராபுரத்துக்கும், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை திருநாவலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.