4 தாசில்தார்கள் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
கள்ளக்குறிச்சி,
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வந்த தாசில்தார் மணிமேகலை, அதே அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த ராஜு, உளுந்தூர்பேட்டை தாசில்தாராகவும், கல்வராயன்மலையில் பணிபுரிந்து வந்த தனி தாசில்தார் குமரன் சங்கராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், சங்கராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த அனந்தசயனன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ளார்.