ஆலங்குளம்,
வெம்பக்கோட்டை வட்டார விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் (அட்மா திட்டம்) கீழ் விவசாயிகளுக்கு சிறுதானிய பயிர் சாகுபடி பற்றிய தொழில்நுட்ப பயிற்சி முகாம் கே.லட்சுமியாபுரம் கிராமத்தில் நடைபெற்றது. முகாமிற்கு வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முத்தையா தலைமை தாங்கினார்.
கங்கர் செவல் ஊராட்சி தலைவர் கலா சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முகாமில் வெம்பக்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் முத்துக்குமார், தொழில்முனைவோர் மாரிஸ்வரி, மாவட்ட வன அலுவலர் சுதாகர், தொழில்நுட்ப மேலாளர் முத்து செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுரேஷ், விக்னேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பு தாலுகா கோவிந்தநல்லூர் இயற்கை பண்னை விவசாயி முனிஸ்வரன் கலந்துகொண்டு, சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்வது குறித்து விளக்கி கூறினார்.