தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி

பட்டுக்கோட்டை அருகே தென்னை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-08-28 22:12 GMT

பட்டுக்கோட்டை;

பட்டுக்கோட்டை வட்டாரம் சென்டாங்காடு கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னை விவசாயிகளுக்கான பயிற்சியும், நைனாங்குளம் கிராமத்தில் நெல் விவசாயிகளுக்கான பயிற்சியும் நடைபெற்றது. சென்டாங்காடு கிராமத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு வேளாண் துணை இயக்குனர் மத்திய திட்டம் ஈஸ்வர் தலைமை தாங்கி பேசினார்.. அப்போது அவர் கூறியதாவது:- செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களான தொழு உரம் பஞ்ச காவியா, மீன் அமிலம் போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துவதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும். இயற்கை வளமும் பாதுகாக்கப்படுகிறது. என கூறினார். பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வரவேற்றார். நைனாங்குளத்தில் நடந்த பயிற்சியில் 20 அங்கக விவசாயிகள் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை விதைச் சான்று அலுவலர் சங்கீதா பேசினார். முடிவில் வேளாண்மை அலுவலர் அப்சரா நன்றி கூறினார். பயிற்சி ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்