விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
கழுகுமலை அருகே விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
கழுகுமலை:
கயத்தாறு வட்டார வேளாண்மை துறை அட்மா மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் கழுகுமலை அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் மாவட்ட அளவில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியை சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்தும், ஒருங்கிணைந்த பண்ணைய முறை குறித்தும், உழவர் சந்தை, அரசு சேமிப்பு கிடங்கு, தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள், கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் உள்ளிட்டவை குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் பிரான்சிஸ், வேளாண்மை உதவி அலுவலர் முத்துராஜ், உதவி தோட்டக்கலை அலுவலர் வனிதாமாரி, உதவி கால்நடை மருத்துவர் கனகலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரத்தினம்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை அட்மா தொழில்நுட்ப மேலாளர் சாலமோன் நவராஜ் பொற்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.