செந்தில் பாலாஜி வழக்கு நவ.29க்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் விசாரணையை ஒத்திவைத்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.

Update: 2024-11-22 16:11 GMT

சென்னை,

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.

இந்த வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் தடயவியல் துறை கணினிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணன் ஏற்கனவே சாட்சியம் அளித்திருந்தார்.இன்று மணிவண்ணன் கோர்ட்டில் ஆஜராகி இருந்த நிலையில் அவரிடம், செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.

அவரிடம் குறுக்கு விசாரணை நிறைவடையாத நிலையில், அடுத்த விசாரணையை 29-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். குறுக்கு விசாரணைக்காக அன்றைய தினம் உதவி இயக்குநர் மணிவண்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்