விபத்தில் வியாபாரி பலி

விபத்தில் வியாபாரி பரிதாபமாக பலியானார்.

Update: 2023-09-24 21:34 GMT


மேற்குவங்க மாநிலம் அசன்சால் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் அகர்வால் (வயது 58). இவர் சிவகாசியில் தீப்பெட்டி வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் சிவகாசி பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பஸ் ஒன்று எதிரே வந்துள்ளது. அந்த பஸ் தன் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்