அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ராமபுரம் கிராமத்ைத சேர்ந்தவர் தனசேகர் (வயது 58), விவசாயி. இவர் தனது மனைவி மணிமேகலை மற்றும் பேத்தி ஷாஷினியுடன் (2½)மோட்டார் சைக்கிளில் தென்னூர்-ராமபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மணிமேகலை, அவரது பேத்தியை அப்பகுதி மக்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.