வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளைஅழைத்து சென்றவருக்கு அபராதம்

வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்றவருக்கு அபராதம்

Update: 2023-08-24 20:30 GMT

வால்பாறை

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் இரவில் வனவிலங்குகளை ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் வால்பாறை கக்கன்காலனி பகுதியை சேர்ந்த நியாஸ்(வயது 26) என்பவர் நேற்று முன்தினம் இரவு 11.45 மணியளவில் காஞ்சமலை எஸ்டேட் வனப்பகுதியில் வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகளை வாகன சவாரி அழைத்து சென்றதாக தெரிகிறது.

இதை அந்த வழியாக ரோந்து வந்த வனச்சரகர் வெங்கடேஷ் கண்டுபிடித்தார். இதையடுத்து வாகன சவாரிக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த அவர், நியாசுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். இனிமேல் சுற்றுலா பயணிகளை இரவு நேர வாகன சவாரி அழைத்து சென்றால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனச்சரகர் வெங்கடேஷ் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்