விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்,அனைத்து அருவிகளிலும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-07-16 12:21 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. சாரல் மழை விட்டு விட்டு பெய்கிறது. குளிர்ந்த காற்று வேகமாக வீசுகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

நேற்று மதியத்திற்கு மேல் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதேபோன்று பழைய குற்றாலம் அருவியிலும் இரவில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் இன்று வெள்ளப்பெருக்கு குறைந்ததால் இந்த இரண்டு அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், இன்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். இது தவிர கேரள மாநிலம் அருகில் இருப்பதால் அங்கிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்திருந்தனர். அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்