குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Update: 2023-08-03 20:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது, ஆழியாறு அணை. இந்த அணை அருகில் பூங்கா, மீன் அருகாட்சியகம் அமைந்து உள்ளது. ஆடிப்பெருக்கு விடுமுறை தினத்தையொட்டி கோவை மட்டுமின்றி திருப்பூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள், புதுமண தம்பதிகள் உள்பட பலரும் குடும்பத்துடன் வந்து அணை, பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். மேலும் அணையில் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர். இது தவிர அணை பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்து நின்று நுழைவு சீட்டு வாங்கினர்.

ஆனால் அவர்கள் வந்த வாகனங்களை வால்பாறை ரோட்டில் ஆங்காங்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் குரங்கு நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதையொட்டி வனத்துறையினர் நீர்வீழ்ச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முன்னதாக ஆழியாறு சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் டிக்கெட் வாங்குவதற்கு வாகனங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்களை கொண்டு செல்கிறார்களா? என்று வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்