வார இறுதியையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கான‌லில் நிலவி வரும் சீதோஷ்ண சூழல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Update: 2022-12-18 14:34 GMT

திண்டுக்கல்,

'ம‌லைக‌ளின் இள‌வ‌ர‌சி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அந்த வகையில் இன்று வாரவிடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.

கொடைக்கான‌லில் நிலவி வரும் சீதோஷ்ண சூழல் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மலைகளை வருடிச் செல்லும் மேகக்கூட்டத்தை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் உற்சாகமாக பொழுதைக் கழித்தனர்.

மேலும் தங்கள் குடும்பத்தினரோடு பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள‌ பூக்க‌ளையும், இயற்கை அழகினையும் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் கடந்த இரண்டு நாட்களாக கொடைக்காணல் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்