குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியில்...!

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2022-07-03 12:15 GMT

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த சாரல் மழையினால் இங்கு உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் பகுதியில் நேற்று முழுவதும் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

இரவிலும் தொடர்ந்து பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இன்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டனர்.

குடும்பங்களாகவும், நண்பர்களாகவும் ஏராளமானோர் குவிந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அவ்வப்போது போலீசார் சீர் செய்தனர். இன்று பகல் முழுவதும் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது. இந்த சாரல் மழை தொடர்ந்து நீடித்தால் சீசன் களைகட்டும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்