தமிழ்நாட்டு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் தொடங்கியது

தமிழ்நாட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கின.

Update: 2023-01-13 04:51 GMT

சென்னை,

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துடன் தமிழ்நாட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கின.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். முன்னதாக பேரவையில் மத்திய முன்னாள் மந்திரி சரத் யாதவ் மறைவிற்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

இன்று, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைகிறது.  இன்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்