கச்சத்தீவு ஆலய விழாவில் பங்கேற்க 79 படகுகளில் 2,408 பேர் பயணம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க 79 படகுகளில் 2408 பேர், ராமேசுவரத்தில் இருந்து நாளை மறுநாள் புறப்படுகிறார்கள்..

Update: 2023-02-28 18:45 GMT

ராமேசுவரம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க 79 படகுகளில் 2408 பேர், ராமேசுவரத்தில் இருந்து நாளை மறுநாள் புறப்படுகிறார்கள்..

கச்சத்தீவு ஆலய விழா

தமிழகத்துக்கும்-இலங்கைக்கும் இடையே நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ளது கச்சத்தீவு. குறிப்பாக சொல்வது என்றால், ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 18 மைல் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இந்த தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.

ஆண்டுதோறும் இந்த ஆலய திருவிழா பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்கள் நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான விழா நாைள மறுநாள் (3-ந் ேததி) தொடங்குகிறது. 4-ந் தேதி வரை விழா நடக்கிறது.

கொடியேற்றம்

நாளை மறுநாள் மாலை 4:30 மணிக்கு அந்தோணியாரின் உருவம் பதித்த கொடியானது ஆலயம் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து 14 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி மற்றும் திருவிழா திருப்பலி நடைபெற்று, நற்கருணை ஆசீரும் நடைபெறும். இரவில் தேர் பவனி நடக்கிறது.

மறுநாள் (4-ந் தேதி) காலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் மறை மாவட்ட பிஷப் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. இதன் பின்னர் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.

2408 பேர் பயணம்

இந்த ஆண்டுக்கான விழாவில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 19 நாட்டுப்படகுகளில் செல்ல 1960 ஆண்களும், 379 பெண்களும் 38 ஆண் குழந்தைகளும், 31 பெண் குழந்தைகளும் என மொத்தம் 2408 பேர் பதிவு செய்துள்ளனர்.

கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல இந்த படகுகள் அனைத்தும் நாளை மறுநாள் காலை 8 மணியில் இருந்து ராமேசுவரத்தில் இருந்து புறப்படுகிறது. ஏற்கனவே பதிவு செய்தவர்களை, அதிகாரிகள் ஆவணங்களை பரிசோதித்து அனுப்பி வைக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்