கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிமுற்றுகை போராட்டம் நடத்த முடிவு- செவிலியர்கள் சங்கத்தினர் தீர்மானம்

எம்.ஆர்.பி. செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அடுத்த மாதம் 10-ந் தேதிசென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Update: 2023-09-10 21:21 GMT


எம்.ஆர்.பி. செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அடுத்த மாதம் 10-ந் தேதிசென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் சுஜாதா வரவேற்றார். வேலை அறிக்கை மற்றும் போராட்ட அறிவிப்பை பொதுச்செயலாளர் சுபின் அறிவித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொது செயலாளர் செல்வம் சிறப்புரை நிகழ்த்தினார். அரசு ஊழியர் சங்க மதுரை மாவட்ட செயலாளர் நீதிராஜா உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், 8 வருடங்களாக தொகுப்பூதிய முறையில் பணி செய்து வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும். கொரோனா கால கட்டத்தில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டும், எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.

முற்றுகை போராட்டம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 புதிய மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் இரண்டாம் கட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பணி நிரந்தரம் உள்ளிட்ட தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்த மாதம் 10-ந்தேதி சென்னை டி.எம்.எஸ். அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தை நடத்துவதென கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்