திறன் மேம்பாட்டு சாதனம் மூலம்விபத்தில்லாமல் பஸ்களை இயக்க டிரைவர்களுக்கு பயிற்சி

திறன் மேம்பாட்டு சாதனம் மூலம் விபத்தில்லாமல் பஸ்களை இயக்க டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-09-05 00:10 GMT


மதுரை பசுமலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக ஓட்டுனர் திறன் மேம்பாட்டு சாதனம் திறப்பு விழா நேற்று நடந்தது. அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். அதில் கோ.தளபதி எம்.எல்.ஏ., திறன் மேம்பாட்டு சாதனத்தை திறந்து வைத்து பேசும் போது, மதுரை மண்டலத்தில் 890 அரசு பஸ்களில் 1.68 கோடி மகளிர்கள் கடந்த மாதத்தில் மட்டுமே பயணம் செய்துள்ளார்கள். தினமும் 5.50 லட்சம் மகளிர்கள் கட்டணமில்லா பஸ்சில் தினசரி பயணம் செய்கிறார்கள். இந்த திறன் மேம்பாட்டு சாதனம் மூலம் டிரைவர்களின் திறன் அதிகரித்து விபத்து இல்லாமல் பஸ்களை இயக்க முடியும். ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி மையத்தின் மூலம் மனவள கலை மற்றும் தியானப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது என்றார். விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை மண்டல பொது மேலாளர் ராகவன், இணை இயக்குனர் (மக்கள் தொடர்பு) பாஸ்கரன், அலுவலக மக்கள் தொடர்பு அலுவலர் சந்தானகிருஷ்ணன் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்