சனாதனம் என்றால் மாறாதது.. மாற்ற முடியும் என்பது தான் திராவிட மாடல்! - தொல்.திருமாளவன் பேச்சு

திருவாரூரில் தி.க. நடத்தும் சனாதன எதிர்ப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் தொல்.திருமாளவன் கலந்து கொண்டார்.

Update: 2022-09-05 14:41 GMT

திருவாரூர்:

திருவாரூரில் தி.க. நடத்தும் சனாதன எதிர்ப்பு, திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். மேலும் இம்மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தி.மு.க. அமைப்பு செயலாளர் பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாளவன் பேசியதாவது,

தமிழகத்தையும், கேரளாவையும் குறி வைக்கும் சனாதன சக்திகளை விரட்டி அடிக்கப்பட வேண்டும். எதையும் சாதிக்கும் ஆற்றல் தி.கவிற்கும், தி.மு.கவிற்கும் உண்டு. தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் கருணாநிதி தான் காரணம். தனது 13 வயதில் இந்தியை எதிர்த்து குரல் கொடுத்து போராடிய வீதி திருவாரூர் தெற்கு வீதி, அந்த வீதிக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீதி என பெயர் சூட்ட வேண்டும்.

சனாதனம் என்பது தான் ஆரிய மாடல். சனாதனம் என்றால் மாறாதது நிலையானது என்று பொருள். இதுவே அறிவியலுக்கு முரணானது. எல்லாம் மாறி கொண்டே இருக்கும், மாற்ற முடியும் என்பது தான் திராவிட மாடலாகும் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்