தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2023-06-09 14:08 GMT

சென்னை,

சேலம் எடப்பாடியில் அதிமுக கொடியேற்றுவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சியடைந்துள்ளது.

தமிழகத்தில் இயங்கும் 5 ஆயிரத்து 800 மதுபான பார்களில் 4 ஆயிரம் பார்களுக்கு அனுமதியில்லை. தமிழகத்தில் அனுமதியில்லாத மதுபான பார்கள் மூலம் ரூ.20 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்