தேனி அருகே தனியார் நிறுவனத்தில் மின் கம்பிகள் திருட்டு

தேனி அருகே தனியார் நிறுவனத்தில் மின் கம்பிகள் திருடுபோனது.;

Update: 2023-04-08 20:45 GMT

தேனி அருகே மதுராபுரி-அழகாபுரி சாலையில் தனியார் தொழில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சர்வீஸ் அறைக்குள் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் புகுந்து, அங்கிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான மின்சார கம்பிகளை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர் நாகராஜ் தேனி அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்