விநாயகர் சிலைகள் திருட்டு
கடுவனூர் பகுதி கோவில்களில் விநாயகர் சிலைகள் திருட்டை தடுக்க ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளர்.
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனூரின் உள்பகுதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலின் முன் பகுதியில் விநாயகர் சிலை வைத்து பக்தா்கள் வழிபட்டு வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் இந்த விநாயகர் சிலையை திருடி சென்று விட்டனர்.
இதே போல் அருகே உள்ள புதூர் ஸ்ரீ பாலமுருகன் கோவிலின் வெளிப்பகுதியில் இருந்த விநாயகர் சிலையையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். தொடர்ந்து இப்பகுதிகளில் விநாயகர் சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சம்பவம் நிகழ்ந்து வருவது பக்தர்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இப்பகுதியில் விநாயகர் சிலைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை கைது செய்வதோடு, இரவு நேர ரோந்து பணியையும் போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.