காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை
காஞ்சீபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.;
காஞ்சீபுரத்தை அடுத்த வெங்கடாபுரம் கிராமம் ரோட்டு தெருவில் வசிப்பவர் ஏழுமலை. இவர் காஞ்சீபுரம் பஸ் நிலைய பகுதியில் ஸ்டூடியோ வைத்துள்ளார். இவர் தன்னுடைய மனைவி, 2 பிள்ளைகள் மற்றும் மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு வழக்கம் போல தூங்கி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் சத்தம் கேட்டு ஏழுமலையின் மனைவி அம்பிகா எழுந்து பார்த்தார். மர்மநபர்கள் 3 பேர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து திருட்டில் ஈடுபட்டு விட்டு தப்பிச்செல்வது தெரியவந்தது. அம்பிகா கூச்சலிட்டு அவர்களை பிடிக்க முயன்றார். அதற்குள் அவர்கள் அம்பிகாவை கீழே தள்ளி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.
பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகை, 550 கிராம் வெள்ளிப்பொருட்கள், ரூ.2 ஆயிரம் போன்றவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து ஏழுமலை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.