வீட்டின் பூட்ைட உடைத்து நகை திருட்டு
வீட்டின் பூட்ைட உடைத்து நகை திருடப்பட்டது.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள முள்ளிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி செல்வி. இவர் வயல்கோட்டை கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இரண்டு மகன்களும் வெளியே சென்று விட்டனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 10 பவுன் நகைகளை திருடி சென்றனர். இது குறித்து ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.