பாலத்தில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பலி

தோகைமலை அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து வியாபாரி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-10-27 00:07 IST

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள பொம்மாநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 41). காய்கறி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரத்துக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் தனது ஊரின் அருகே உள்ள பாலத்தின் தடுப்புக்கட்டையில் படுத்து தூங்கி உள்ளார். அப்போது நிலைதடுமாறி பாலத்தில் இருந்து தவறி முத்துசாமி கீழே விழுந்தார். இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முத்துசாமியின் மனைவி முருகவள்ளி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்