நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள், பெற்றோர்கள் அவதி

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள், பெற்றோர்கள் அவதி

Update: 2022-07-17 15:00 GMT

நன்னிலம்:

நன்னிலம் கங்களாஞ்சேரி அருகே நாகக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கேந்திர வித்யாலயா இயங்கி வருகிறது. நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மையத்தில் நீட் தே்ாவு எழுதுவதற்காக 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நீண்ட நேரம் மாணவர்கள், பெற்றோர்கள் வெயிலில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது. 2 மணிக்கு தேர்வு என்றாலும் காலையிலேயே மாணவர்களை பெற்றோர்கள் மையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது கங்களாஞ்சேரியில் இருந்து தேர்வு மையம் வரையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பஸ் வசதி இ்ல்லாததால் பெற்றோர்களும், மாணவர்களும் நடந்து வந்தனர். தேர்வு முடியும் வரை வெளியே காத்திருந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வெயில் கொடுமையாலும், நீண்ட நேரம் அமர முடியாமலும் அவதியடைந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை நன்னிலம் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்