மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பால் பரபரப்பு

நெல்லை சந்திப்பு பஸ்நிலைய பகுதியில் மோட்டார் சைக்கிளில் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-09-12 20:05 GMT

நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு நேற்று காலை நபர் ஒருவர் வந்தார். அவர் தனது மோட்டார் சைக்கிளை வங்கியின் முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது அங்குள்ள கழிவுநீர் ஓடையில் இருந்து வெளியே வந்த பாம்பு ஒன்று நைசாக மோட்டார் சைக்கிளில் புகுந்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினரும், வாகன உரிமையாளரும் பாம்பை விரட்ட முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பின்னர் அருகில் உள்ள டீக்கடையில் இருந்து வெந்நீர் வாங்கி வந்து ஊற்றவே, மோட்டார் சைக்கிளில் இருந்து பாம்பு வெளியேறியது. ஆனால் அது அங்கு நின்ற ஆட்டோவில் புகுந்தது. பின்னர் அங்கிருந்து விரட்டவே, அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் புகுந்து சென்று விட்டது. எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும் சந்திப்பு பகுதியில் பாம்பு வாகனங்களுக்குள் புகுந்து போக்கு காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்