மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது

மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவர் கைது;

Update: 2022-12-03 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெரியவிளை சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் அருகில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் முதியவர் ஒருவர் மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த முதியவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கொட்டாரம் கிட்டங்கி பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 62) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்