பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைது
ஆவணியாபுரம் கூட்ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைது செய்யப்பட்டார்.;
சேத்துப்பட்டு
பெரணமல்லூரை அடுத்த ஆவணியாபுரம் கூட் ரோடு சஞ்சீவிராயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை (வயது 36).
இவர் அங்குள்ள கூட்ரோட்டில் நின்று கொண்டு ஆபாசமாக பேசியும், பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டும் இருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரணமல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் விரைந்து சென்று அவரை கைது செய்தார்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.