மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் சாவு
பூம்புகாரில் பஸ் நிலையம் அருகே மயங்கிய நிலையில் கிடந்த முதியவர் இறந்தார்
திருவெண்காடு:
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சுற்றுலா வளாகத்தில் உள்ள பஸ் நிலையம் அருகே 60 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த நபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழ்க்குப்பதிவு செய்த போலீசார் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.