அரசியல்வாதிகள் செல்லாத இடங்களுக்கு கூட மக்களைதேடி மருத்துவ திட்டம் சென்றடைந்துள்ளது - மா.சுப்பிரமணியன்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்காக ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
மக்களைத்தேடி மருத்துவத்திட்டம் பற்றி எதிர்க்கட்சி தலைவ ர் பழனிசாமி குற்றச்சாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுதுறை மைஅச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மத்திய அரசாலேயே பாராட்டப்பட்ட திட்டம் ஆகும். திட்டத்திற்காக ரூ.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பயனாளிகள் பட்டியலை தரத்தயார். அரசியல்வாதிகள் செல்லாத இடங்களுக்கு கூட மக்களைதேடி மருத்துவ திட்டம் சென்றடைந்துள்ளது என்றார்.
மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் தவறான புள்ளிவிவரங்களை தந்தது கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். மேலும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்துகள் வழங்கப்படுவதில்லை என்றும் பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார்.