பூ கடைக்காரரை மிரட்டியவர் கைது

கல்லிடைக்குறிச்சியில் பூ கடைக்காரரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-21 19:30 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த கருணாகரன் (வயது 42) என்பவர் கோல்டன் நகரில் பூக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கருணாகரனின் கடைக்கு வந்த கல்லிடைக்குறிச்சி காலனியை சேர்ந்த இசக்கிமுத்து (40) என்பவர் அவரது உறவினர் துக்க நிகழ்ச்சிகாக பூ வாங்கி சென்றார். பின்னர் திரும்பி வந்து கருணாகரனிடம், பூ எப்படி அதிக விலைக்கு விற்கலாம் என்று தகராறு செய்து மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசக்கிமுத்துவை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்