காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-24 18:14 GMT

வெள்ளியணை அருகே அய்யம்பாளையம் பகுதியில் கடந்த 12-ந்தேதி அடையாளம் தெரியாத சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, வாகனம் மோதி படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி கடந்த 22-ந்தேதி இறந்்தார். அவரது உடல் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்