மாணவர்கள் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது

மாணவர்கள் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கியது

Update: 2022-08-08 15:00 GMT

வெளிப்பாளையம்,

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு முதுகலை மற்றும் இளங்கலை பாடப்பிரிவுகளில் 460 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் பிஏ தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி கணிதம், பி.காம், பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளில் என்.சி.சி, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர், உடல் ஊனமுற்றோர், உடற்கல்வி ஒதுக்கீடு ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது. தொடர்ந்து பி.எஸ்சி கணிதம் பாடப்பிரிவிற்கு கலந்தாய்வு நடந்தது. நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு பி.காம், பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், வருகிற 11-ந்தேதி காலை 10 மணிக்கு பிஏ தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 10,11,12-ம் வகுப்பு மதிப்பெண்களின் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்று, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ரேசன்கார்டு ஆகிய சான்றிதழ்களின் உண்மை நகல் மற்றும் ஜெராக்ஸ் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என முதல்வர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்