நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

சதுரகிரியில் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

Update: 2023-10-15 20:24 GMT

சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி, பிலாவடி கருப்பசாமி, ஆனந்தவல்லி அம்மன் ஆகிய கோவில்கள் உள்ளன. இங்கு ஆடி அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, தை அமாவாசை விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு நவராத்திரி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 5 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

வருகிற 23-ந் தேதி இரவு 7 மணிக்கு சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பஜனை வழிபாடு நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

24-ந் தேதி விஜயதசமியை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் மகிஷாசுரவர்தினி அலங்காரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அம்பு விடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்